Praise & Worship (Pastor. Jacob Koshy) - Volume 4

தேன் இனிமையிலும் ஏசுவின்
நாமம் திவ்ய மதுர மாமே
அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய்
தினம் நீ என் மனமே

பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே

பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் - அதைப்
பூண்டு கொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே



எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே - எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - ஐயா

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் - இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் - ஐயா



எங்கள் தேவனே எங்கள் ராஜனே
என்றும் உம்மையே துதிப்போம்
நன்றி உள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்



மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல
என் ஆத்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்

நீர் என் பெலனும் என் கேடகமாம்
என்னாவி என்றும் உம்மில் அடிபணியும்
நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்



பிதாவே நீர் எந்தன் தந்தை
இயேசுவே நீர் எந்தன் ரட்சகர்
ஆவியே தேற்றரவாளனே
ஆவியே என் ஆத்துமாவே



அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவர் நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் வல்ல கரத்தினாலே
ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கன மகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை

Ah! Lord God, Thou hast made the Heavens
And the earth by Thy great power
Ah! Lord God, Thou hast made the heavens
And the earth by Thine outstretched arm
Nothing is too difficult for thee (2)
Oh! Great and mighty God
Great in counsel mighty in deed
Oh! Nothing Nothing, Absolutely nothing
Nothing is too difficult for Thee



கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே

முழந்தாழ் படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்

எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர்

எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னை காண்பவரே

முழந்தாழ் படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்

எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே



உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிருள்ள தெய்வமே நீர்
இயேசுவே (6) என் ஆருயிரே

உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை போற்றிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்



தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ?
சிறுமைத் தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

ஆத்துமந் தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

சா நிழல் பள்ளத் திறந்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
சுக தைலம் கொண்டென் தலையைச்
சுகமாய் அபிஷேகம் செய்குவார்

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்



கேரித் ஆற்றுநீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
பானையில் மா எண்ணை குறைந்திட்டாலும்
கர்த்தன் இயேசு நமக்கு உண்டு

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதர் உண்டு அவர் சமூகம் உண்டு

உனக்குள்ளே இருக்கின்ற உன்
இயேசு என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்கள் செய்திடுவார்

இல்லை என்ற நிலை வந்ததோ
இருப்பது போல் அழைக்கும் தேவன்
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
அழைத்தவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே



பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே

இயேசு போதுமே, இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே

மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐஸ்வரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்

எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னை சந்திக்க வந்திடுவாரே



இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப்பொழுதும் தூங்காமல்
கண்மணி போல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அலைகள் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார்

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்



தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
உன்னை மறவேன் என்றதாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அருந்துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
உன்னை மறவேன் என்றதாலே ஸ்தோத்திரம்
உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
உன்னதா எந்தன் புகலிடமே

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அருந்துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே



எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காதே காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

ஆ... ஆ... ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரு பாக்கியமே
இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்



என்னை மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே
என்னை நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறிவிட்டீர்
இந்தக் கல்வாரி ரத்தம் எனக்காக சிந்தி
தழுவி அணைத்தீரே

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
என் இதயம் துள்ளுதையா



பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்து செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத் தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன்

அழைத்தீரே ஏசுவே
அன்போடு என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே



சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு, பரம பொற்பாதனுக்கு,
நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு